எல்பிஜி கியாஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் இன்று முதல் தொடங்கியது

Feb 12, 2018, 16:00 PM IST

சேலம்: மத்திய அரசு அறிவித்துள்ள புதிய டெண்டர் முறையை திரும்பப்பெற வலியுறுத்தி கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் வேலை நிறுத்தம் போராட்டம் இன்று முதல் தொடங்கியது. இதனால், கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

தென் மண்டலி எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் கீழ் 4500 லாரிகள் இயங்கி வருகிறது. இந்த லாரிகள் இந்தியா முழுவதும் மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த லாரிகள் டெண்டர் முறையில் எடுக்கப்பட்டு வந்தது. இதுவரையில் மண்டல வாரியாக எடுக்கப்பட்டு வந்த டெண்டர் முறையை இனி மாநில வாரியாக நடத்தவும், அதிலும் அந்தந்த மாநிலங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் எனவும் புதிய முறையை மத்திய அரசு அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சங்கத்தினர், இந்த புதிய முறைக்கான அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்றும் இல்லை என்றால் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுப்படுவோம் எனவும் மத்திய அரசை எச்சரித்திருந்தனர்.
ஆனால், இதற்கு மத்திய அரசிடம் இருந்து பதில்வராததால் ஏற்கனவே அறிவித்ததுபோல் இன்று முதல் சங்கத்தினர் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய வேலை நிறுத்தப் போராட்டம் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் இயங்கி வந்த 4500 லாரிகளும் இயங்கவில்லை. இதனால், சமையல் கியாஸ் சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

தங்களது கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் தற்போது தென் மண்டல அளவில் இன்று தொடங்கிய வேலை நிறுத்தம் போராட்டம் கிழக்கு மண்டலத்திலும் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறும் தென் மண்டல பல்க் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

You'r reading எல்பிஜி கியாஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் இன்று முதல் தொடங்கியது Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை