ஆஃப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் நிகழ்த்திய அபூர்வ சாதனையை தெரியுமா?

ஆஃப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் ஒரே ரன்கள் வித்தியாசத்தில் ஒன்றையொன்று வீழ்த்தியுள்ளது.

Feb 12, 2018, 16:40 PM IST

ஆஃப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் ஒரே அளவிலான ரன்கள் வித்தியாசத்தில் ஒன்றையொன்று வீழ்த்தியுள்ளது.

ஆஃப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 9ஆம் தேதி ஷார்ஜாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் குவித்தது.

பின்னர் 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 179 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால், ஆஃப்கானிஸ்தான் அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது ஒருநாள் போட்டி அதே ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் 333 ரன்கள் குவிக்க, தொடர்ந்து ஆடிய ஆஃப்கானிஸ்தான் 179 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால், ஜிம்பாப்வே அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதில் அதிசய நிகழ்வாக முதலில் பேட்டிங் செய்த இரு அணிகளும் குவித்த ரன்கள் 333 ஆகும். பின்னர் இரு அணிகளும் துரத்தியபோது எடுத்த ரன்கள் 179 ஆகும். இரு அணிகளும் 154 ரன்கள் வித்தியாசத்தில் ஒன்றையொன்று வீழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தகுந்தது.

இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளில் தலா ஒரு வீரர் சதம் விளாசியது குறிப்பிடத்தகுந்தது. இரண்டு போட்டிகளும் நடைபெற்ற ஷார்ஜா மைதானம் என்பது முக்கியமானது.

You'r reading ஆஃப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் நிகழ்த்திய அபூர்வ சாதனையை தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை