மீன்பிடிக்கு தடை: தமிழகம், புதுச்சேரியில் நாளை நள்ளிரவு முதல் அமல்

Apr 13, 2018, 12:30 PM IST

தமிழகம், புதுச்சேரி கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கம் காரணமாக நாளை நள்ளிரவு முதல் மீன்பிடிக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கம் காரணமாக வரும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இதன் எதிரொலியாக, தூத்துக்குடி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இத்தடை அமல்படுத்துவதன் மூலம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தப்படும்.

மேலும், இந்த தடை உத்தரவு காரணமாக மீன்பிடி அனுமதி போக்கன் வழங்குவதை மீன்வளத்துறை அதிகாரிகள் நிறுத்திவிட்டனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மீன்பிடிக்கு தடை: தமிழகம், புதுச்சேரியில் நாளை நள்ளிரவு முதல் அமல் Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை