தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டி: ஏலம் மூலம் வீரர்கள் தேர்வு

Jun 1, 2018, 09:03 AM IST

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கடந்த 2016ம் ஆண்டு அறிமுகம் செய்தது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். அறிமுகம் செய்த முதல் ஆண்டில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியும், 2017ம் ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும் கோப்பையை கைப்பற்றியது. டி.என்.பி.எல். அணிகள் மோதிக்கொண்ட ஆட்டங்கள் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு 3வது டி.என்.பி.எல் வரும் ஜூலை 11ந் தேதி துவங்க உள்ளது. சென்னை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், கோவை, திண்டுக்கல், காரைக்குடி என தமிழ்நாட்டின் 8 முக்கிய மாவட்டங்களின் பெயர்களில் அணிகள் உள்ளது.

அதன்படி இந்த சீசனுக்கான வீரர்கள் தேர்வு செய்யும் பணி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்ய 8 அணிகளின் உரிமையாளர்களும் போட்டி போட்டனர்.

அணிகளின் உரிமையாளர்கள் தங்கள் அணியில் 3 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம். அது போக தங்களின் அணிக்கு எந்த வீரர்கள் வேண்டும் என்பதை ஏலத்தில் எடுக்க வேண்டும்.

சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி: எஸ்.கார்த்திக், ஆர்.அலெக்சாண்டர், சசிதேவ் ஆகிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டது, அது போக விஜய் ஷங்கர், முருகன் அஸ்வின், ஹரிஷ் குமார், மற்றும் கங்கா ஸ்ரீதர் ராஜு என தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்தது.

டூட்டி பேட்ரியாட்ஸ் அணி: சுப்ரமணியன் ஆனந்த், ஆகாஷ் சும்ரா, கணேஷ் மூர்த்தி ஆகிய வீரர்களை தக்க வைத்து கொண்டதோடு, வாஷிங்டன் சுந்தர், கௌஷிக் காந்தி, சாய் கிஷோர், ஆர். சதிஷ், அதிசயராஜ் டேவிட்சன், என தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வுசெய்து கொண்டது.

லைக்கா கோவை அணி: ரோஹித், பிரதோஷ் ரஞ்சன் பால், அஜித் ராம் போன்றறை, தக்க வைத்துக்கொண்டதோடு, டி. நடராஜன், அபிநவ் முகுந்த், விக்னேஷ், மற்றும் ஷாருகானை தேர்வுசெய்தது கோவை அணி.

மதுரை பேன்தர்ஸ் அணி: அருண் கார்த்திக், ஷிஜித் சந்திரன், கார்த்திகேயன் என மூன்று வீரர்களை ஏற்கனவே தக்கவைத்து கொண்ட மதுரை அணி ஏலத்தில் ரகில்ஷா, தலைவன் சற்குணம், கௌஷிக், ஆகியோரை தேர்வு செய்தது.

ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி: இந்திரஜித், பரத் ஷங்கர் விக்னேஷ் ஆகிய வீரர்களை தக்க வைத்துக்கொண்டு, முரளி விஜய், கணபதி, சுரேஷ்குமார் ஆகிய வீரர்களை ஏலத்தில் எடுத்துக்கொண்டு தங்கள் அணிக்கு பலத்தை சேர்த்துக்கொண்டது.

காரைக்குடி காளை அணி: ஷாஜஹான், ராஜ்குமார், மோகன் பிரசாத் ஆகிய வீரர்களை தக்கவைத்து, மேலும், அணிக்கு மகேஷ், கவின், சூர்யபிரகாஷ் ஆகிய வீரர்களை ஏலத்தில் எடுத்தது.

காஞ்சி வீரன்ஸ் அணி: ஹவுசிக் ஸ்ரீனிவாஸ், முகிலேஷ், சுப்ரமணிய சிவா என வீரர்களின் பட்டியலை நீட்டித்தும், அபராஜித், சிலம்பரசன், சஞ்சய் யாதவ் ஆகிய வீரர்களை ஏற்கனவே தக்கவைத்து கொண்டும் அணி பலமாக உருவெடுத்துள்ளது.

திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி: ஆர்.அஸ்வின், ஜெகதீசன், விவேக் ஆகிய முக்கிய வீரர்களை தக்கவைத்து கொண்டும், ஏலத்தில் அனிருதா சீதாராம், முகமது, ரோஹித் ஆகிய வீரர்களை எடுத்து.

ஒவ்வொரு அணியும் தலா 3 வீரர்களை அணியில் தக்க வைத்துக்கொண்ட நிலையில், 15 வீரர்களை ஏலத்தின் மூலம் அணிகளில் சேர்த்துக்கொண்டனர். இந்த ஏலத்தில், மொத்தம் 770 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டி: ஏலம் மூலம் வீரர்கள் தேர்வு Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை