மெட்ரோ ரயில் கட்டணம்... நீதி மன்றத்தில் வழக்கு!

மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைக்கக் கோரி... நீதின்றத்தில் வழக்கு!

by Radha, Jun 16, 2018, 22:00 PM IST

சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Chennai metro Train

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 2009ம் ஆண்டு துவங்கப்பட்டன. முதல் கட்டமாக 2015 ஜூன் மாதம் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது.

கடந்த மே மாதம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலும், டி.எம்.எஸ் முதல் மீனம்பாக்கம் விமான நிலையம் வரையிலும் என 35 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.

புறநகர் மின்சார ரயில்களைப் போல மெட்ரோ ரயில்களுக்கும் குறைந்தது 5 ரூபாய் முதல் அதிகபட்சமாக 10 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்க கோரி சென்னை, உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்களை விட 12 மடங்கு அதிகமாக 60 ரூபாய் வரை மெட்ரோ ரயில்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதிக கட்டணம் வசூலிப்பது மக்களின் பொருளாதார சூழலை பாதிக்கும் என்று அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதேபோல, மெட்ரோ ரயில் சேவையை மத்திய ரயில்வே துறையே ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading மெட்ரோ ரயில் கட்டணம்... நீதி மன்றத்தில் வழக்கு! Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை