தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது வரவேற்கத்தக்கது என்று அப்போலோ குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார்.
அப்போலோ மருத்துவமனை சார்பில் 1500 க்கும் மேற்பட்டவர்களுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று புற்றுநோய் அறுவை சிகிச்சை சாதனை விழா சென்னையில் நடந்தது.
இதில் பேசிய அப்போலோ நிறுவன தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, "இந்தியா முழுவதிலும் இருந்து மட்டுமல்ல வெளிநாடுகளிலும் சேர்ந்த 1,500க்கும் அதிகமானோர் நமது வாழ்வை அச்சுறுத்தும் உடல் நிலையில் இருந்து எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் புது வாழ்வு பெற உதவி இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்"
எலும்பு மஜ்ஜையை தானமாக கொடுப்பதற்கு மக்கள் முன் வர வேண்டும். இதனால் பல உயிர்களை காப்பாற்றலாம். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது வரவேற்கத்தக்கது.
மேலும், இதுபோன்ற மருத்துவமனைகள் இங்கு அமைப்பதன் மூலம் மக்கள் ஆரோக்கியத்துடன் இருப்பர்" என்றார்.
இந்த நிகழ்வின் போது எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பிரதாப் ரெட்டியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.