சேகர் ரெட்டி மீதான வழக்கு... திடீர் திருப்பம்!

சேகர் செட்டி மீதான வழக்கில் 2.ஐ தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

by Radha, Jun 27, 2018, 12:09 PM IST

புதிய 2-ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பதுக்கியதாக சேகர் ரெட்டி உள்பட 5 பேருக்கு எதிரான 3 வழக்குகளில் 2 வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

Shekhar Reddy

கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் வீடு, அலுவலகத்தில் நடந்த வருமான வரி சோதனையில் 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக சேகர் ரெட்டி உள்பட 5 பேர் மீது சிபிஐ 3 வழக்குகள் பதிவு செய்தது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனிடையே, 34 கோடி ரூபாய் கைப்பற்ற சம்பவம் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் பதிவான வழக்குகளை ரத்து செய்யக் கோரி சேகர் ரெட்டி தரப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஒரே குற்றச்செயலுக்காக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிபிஐ பதிவு செய்த 3 வழக்குகளில் 2 வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

You'r reading சேகர் ரெட்டி மீதான வழக்கு... திடீர் திருப்பம்! Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை