மாற்றுத்திறன் சிறுமி வன்கொடுமை - ராமதாஸ் கண்டனம்

12 வயது சிறுமி வன்கொடுமை - ராமதாஸ் கண்டனம்

Jul 17, 2018, 23:21 PM IST

மாற்றுத்திறனாளி சிறுமியை 7 மாதங்களாக வன்கொடுமை செய்த 26 கொடியவர்கள் வாழ தகுதியற்றவர்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 Ramadoss

இது தொடர்பாக அவரின் டுவிட்டர் பதிவில், "சென்னையில் 12 வயது மாற்றுத்திறன் சிறுமியை 26 பேர் 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

பாதிக்கப்பட்ட அக்குழந்தைக்கு தரமான மருத்துவமும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்படுவதுடன் அன்புடன் குடும்பத்தினர் கவனித்துக் கொள்ள வேண்டும்!

மாற்றுத்திறன் சிறுமியை 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 26 கொடியவர்களும் மனிதப் பிறவிகள் அல்ல... வாழத்தகுதியற்றவர்கள்.

இந்த வழக்கை விரைவாக விசாரித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அதுவரை அவர்களுக்கு பிணை வழங்கப்படக்கூடாது!

குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து பெற்றோர் விளக்க வேண்டும். வீட்டு வளாகத்தில் விளையாடும்போது கண்காணிக்க வேண்டும். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவதுடன் பள்ளியிலும், வெளியிலும் நடந்தவை குறித்து கேட்டறிவதை வழக்கமாக்க வேண்டும்" என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

You'r reading மாற்றுத்திறன் சிறுமி வன்கொடுமை - ராமதாஸ் கண்டனம் Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை