குழந்தை பிறந்த பிறகு தாய்மார்கள் தங்கள் உடலை அதிக கவனத்துடன் ஆரோக்கியமாக பார்த்து கொள்ள வேண்டும்.ஏனெனில் குழந்தைக்கு தாய் பால் கொடுக்க வேண்டும் என்றால் உடம்பில் அதிக அளவிலான சத்துக்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம்.. சத்தான உணவுகள் சாப்பிட்டாலே குழந்தை ஆரோக்கியமாகவும்,குஸ்தியாவும் வளரும்.சரி வாங்க தாய்மார்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகளை பார்க்கலாம்…
தானிய வகைகளை உண்ணுதல்:-
தானிய வகைகளான ஓட்ஸ்,முழு கோதுமை,கீன்வா,பார்லி இது போன்ற உணவுகளில் வைட்டமின் பி ஊட்டசத்து உள்ளது.இது போன்ற சத்துக்கள் முழுமையாக கிடைப்பதால் தாய்க்கு பால் உற்பத்தியை அதிமாக தூண்டும் ஆற்றல் கொண்டது.தானியங்களை பாலில் சேர்த்து சாப்பிட்டால் உடலில் நார்ச்சத்துக்கள் வளர்ச்சி பெற்று குடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மை:-
தாய்மை அடைந்த பெண்கள் கட்டாயமாக உடலில் நீர்ச்சத்தின் அளவு அதிகமாக இருக்க வேண்டும்.தாகம் எடுக்கும் பொழுது கட்டாயமாக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீரை தவிர காய்கறிகள் கலந்த சூப்,தேங்காய் நீர்,ஜுஸ் இது போன்ற தண்ணீர் வகைகளை எடுத்து கொள்ளலாம்.அதிக தண்ணீர் குடிப்பதால் பால் சுரக்கும் தன்மை மேம்படும்.
இறைச்சிகளை உண்ணலாமா??
சிக்கன் மற்றும் வான்கோழி இறைச்சிகளை சாப்பிட்டால் உடலில் புரதசத்தை அதிக படுத்தும்.நாட்டு கோழியின் இறைச்சி, மூட்டை போன்ற உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது.கொழுப்பு குறைந்த இறைச்சிகளை எந்த வித தயக்கமும் இன்றி சாப்பிடலாம்.இதில் வைட்டமின் பி12 உள்ளதால் பாலின் உற்பத்தியை அதிகரிக்கிறது.இதனால் குழந்தை பெற்ற தாய்மார்கள் குறைந்த கொழுப்பு உடைய இறைச்சிகளை சாப்பிடலாம்..