இஞ்சியில் மருத்துவ குணங்கள் அதிகமாக நிரம்பியுள்ளது.சில பேர் இந்த கொரோனா காலத்தில் தான் இஞ்சியின் மகிமையை அறிந்து இருப்பீர்கள்.. அதலிலும் சில பேர் இஞ்சி சாப்பிட்டால் என்ன நன்மை என்பதை இணையதளத்தில் தேடி பார்த்து கண்டு பிடித்து இருப்பீர்கள். அவர்களை சொல்லி எந்த தப்பும் இல்லை.நமக்கு சொல்லி தர யாரும் இல்லாததே காலத்தின் கொடுமை. காலங்கள் மாற மாற நம் கையில் இருந்த மருத்துவ குறிப்புகள் காணாமல் போகிறது. இஞ்சியில் ஏராளமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. தினமும் இஞ்சியை நாம் சாப்பிடும் உணவுகளில் கலந்து கொள்வது மிகவும் நல்லது. இஞ்சியை நாம் சமையலுக்கு மட்டும் தான் பயன்படுத்தி இருப்போம்..
இஞ்சியினால் முகத்துக்கு பல நன்மைகள் உண்டு இதனை முகத்திற்கு பயன்படுத்த்தினால் முகத்தில் உள்ள அழுக்கை எல்லாம் சுத்தம் செய்து விடும். ஆனால் இஞ்சியை சருமத்திற்கு பயன்படுத்தும் போது அளவாகவும்,கவனமாகவும் பயன்படுத்த வேண்டும்.
தயாரிக்கும் முறை:-
முதலில் இஞ்சியில் உள்ள தோலை சீவி நன்கு வெயிலில் காய வைக்கவும்.நன்கு காய்ந்த பிறகு மிக்சியில் தண்ணீர் இல்லாமல் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு பௌலில் முகத்திற்கு தேவையான தேவையான இஞ்சி பொடியை எடுத்து கொண்டு அதில் பால் பவுடர் அல்லது சந்தன பவுடர் தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். பின்பு அதில் பன்னீரை ஊற்றி நன்கு குழைத்து கொள்ள வேண்டும்.
குழைத்த கலவையை முகத்தில் தடவி 15-20 நிமிடம் உலர விட வேண்டும்.20 நிமிடம் கழித்த பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் எந்த ஒரு கரும் புள்ளிகள், பருக்கள் என எவையும் அண்டாது.
குறிப்பு:- இதனை வாரத்தில் ஒரு தடவை பின்பற்றினால் போதுமானது.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் வயது ஆனாலும் முகம் எப்பொழுதும் இளமையாக இருக்கும் மற்றும் முகம் சுத்தமாக இருக்கும்.