காதலனுடன் மாலத்தீவில் பிரபல நடிகை ஜாலி..

Tapsee Dance with Lover in Maldev

by Chandru, Oct 13, 2020, 16:46 PM IST

ஆடுகளம் நடிகை டாப்ஸி தமிழில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு இந்தியில் நடிக்கச் சென்றார். அங்குத் தேர்வு செய்து படங்களில் நடிக்கிறார். கிளாமருக்கு முக்கியத்துவம் இல்லாத மற்றும் நடிப்புக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் தனக்கென ஒரு இடத்தை பாலிவுட்டில் பிடித்திருக்கிறார் டாப்ஸி. தமிழில் நல்ல கதைகள் வந்தால் ஏற்கிறார். தற்போது விஜய் சேதுபதியுடன் புதிய படமொன்றில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜெய்பூரில் நடந்தது.

டாப்ஸிக்கு காதலன் இருப்பதாக அவ்வப்போது தகவல் வெளிவந்தது ஆனால் அதை அவர் மறுத்து வந்தார். கொரோனா ஊரடங்கு முடக்கத்தில் தான் தனது காதல் மற்றும் காதலன் பற்றிய ரகசியத்தை டாப்ஸி உடைத்தார். வெளிநாட்டு பேட்மிட்டன் வீரர் மதியாஸ் போ என்பவரைக் காதலிப்பதாகவும் தங்கள் இருவரின் காதலை குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.கொரோனா ஊரடங்கு எப்போது முடியும் ஜாலி டிரிப் எப்போது செல்லலாம் என்று காத்திருந்தவர் தற்போது காதலன் மதியாஸ் மற்றும் தனது தங்கையுடன் மாலத் தீவுக்குச் சென்றார்.

அங்கு நீச்சல் உடை அணிந்து கடலில் நீந்தினார். பாடலை சுழலவிட்டு காதலன் மதியாஸ் உடன் நடனம் ஆடினார். மதியாஸும் டாப்ஸிக்கு டஃப் பைட் கொடுத்து நடனம் ஆடினார். அந்த புகைப்படங்களை மதியாஸ் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அவர்களுடன் சேர்ந்து டாப்ஸி தங்கையும் குத்தாட்டம் போட்டார். அதற்கான வீடியோவும் வெளியிட்டார்.

பின்னர் கடலுக்கடியில் உள்ள நீர்த்தாவரங்களைக் காதலனுடன் நீந்திச் சென்று பார்த்து ரசித்தார் டாப்ஸி. இவரின் இந்த காதல் வேகம் சீக்கிரமே அவருக்குக் கெட்டி மேளத்தைக் கொட்ட வைக்கும் என்று ரசிகர்கள் கமென்ட் பகிர்கின்றனர்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை