கருவளையத்தை துரத்த ஈஸியான மூன்று வழிகள்..! உடனே யூஸ் பண்ணி பாருங்க..

by Logeswari, Nov 24, 2020, 19:57 PM IST

பெண்கள் என்றாலே அழகு என்பது பொருள். அவர்களின் முகத்திற்கு மேலும் அழகை சேர்ப்பது அவர்களின் இரு கண்களே. ஆனால்.பெண்களின் அழகை கெடுக்கும் படி சிலரின் கண்களுக்கு கீழே கருவளையம் உண்டாகிறது. இதற்கு காரணம் தூக்கமின்மை, மனஅழுத்தம், ஆரோக்கிய உணவு குறைபாடு, அதிக நேரம் செல்போன் பயன்படுத்துதல் என பல்வேறு காரணங்களை கூறி கொண்டே செல்லலாம். கருவளையத்தால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் படிக்கும் பெண்கள் மற்றும் வேலை செய்யும் பெண்கள் என நிபுணர்கள் கூறிவருகின்றனர். கருவளையத்தை நீக்க பெண்கள் அதிக நேரம் செலவிடுகின்றனர். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. இக்கருவளையத்தை முற்றிலும் நீக்க மூன்று முக்கியமான இயற்கை குறிப்புகளை காணலாம்.

உருளைகிழங்கின் மகத்துவம்:-
உருளைக்கிழங்கில் வைட்டமின் சத்து அதிகம் உள்ளதால் ஒரே வாரத்தில் கருவளையத்தை போக்கும் தன்மையை கொண்டது.உருளையை மிக்சியில் கட்டிகள் வராதவாறு மைய அரைத்து கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை தவறாமல் கண்களுக்கு கீழே பயன்படுத்தி வந்தால் கருவளையம் படிப்படியாக குறையும்.

அரிசி மற்றும் கருஞ்சீரகத்தின் அதிசியம் :-
அரிசி மற்றும் கருஞ்சீரகத்தை சம அளவில் எடுத்து அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்த பிறகு தண்ணீரை வடிகட்டி அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து இரவில் தினமும் தேய்த்து வந்தால் கருவளையம் குறையும்.

தாமரை பூ சொல்லும் தத்துவம்:-
தாமரை பூவில் உள்ள இதழ்களை மட்டும் மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவேண்டும். பிறகு அரைத்த தூளில் விளக்கெண்ணெய் மற்றும் 1 ஸ்புன் தேன் கலந்து அறை வெப்பத்தில் வைக்க வேண்டும். 7 மணி நேரம் கழித்து குளிர்சாதனத்தில் வைத்து தினமும் இரவு இந்த கலவையை கண்களில் தேய்த்து வந்தால் கருவளையம் இருந்த இடமே தெரியாமல் முகம் பொலிவு அடையும். இம்மூன்று குறிப்புகளை தினமும் செய்துவந்தால் கருவளையம் ஒரே வாரத்தில் நீங்கும் என்பதில் சிறிது கூட ஐயமில்லை..

More Aval News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை