அழகான நீளமான நகங்கள் வேண்டுமா?? பார்லர் வேண்டாம்.. வீட்டிலே செய்யலாம்..!

by Logeswari, Dec 16, 2020, 17:46 PM IST

பெண்கள் என்றாலே அழகு என்பது பொருள். அவர்களின் அழகை மெழுகு தீட்ட வீட்டில் தயாரிக்கின்ற பொருள்களை வைத்து பேஸ் மாஸ்க் செய்து முகத்தில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பெண்களின் நகத்தை சுத்தமாகவும் நீளமாகவும் வைத்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்..

வெள்ளரிக்காயில் இருந்து தயாரான எண்ணெய்யை தங்களது நகத்தில் பயன்படுத்துவதால் நகம் சுத்தமாகவும் நீளமாகவும் வளர தூண்டுதலாக அமைகிறது. இதலில் வைட்டமின் பி,வைட்டமின் சி,வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

பெண்களுக்கு நகம் நீளமாக இருக்க வேண்டும் எனவும் அதில் அழகாக நெயில் பாலிஷ் போட வேண்டும் என்று எராளமான ஆசைகள் இருக்கும். ஆனால் சிலரின் நகம் சீக்கிரம் உடைந்து விடும் இதனால் கை பார்க்க அழகாக இருக்காது. தினமும் நகத்தின் நுனியில் வெள்ளரிக்காய் எண்ணெய்யை தடவி வந்தால் நகத்தை உடையாமல் பாதுகாத்து வலிமையாக்க உதவுகிறது.

இந்த எண்ணெய் நகத்தை வலிமையாக்க உதவுவது போல சருமம் வறண்டு போகாமலும் பாதுகாக்கிறது. தினமும் முகத்தில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முகத்தில் ஈரப்பதம் தங்கி முகம் மென்மையாக மாறும்..

More Aval News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை