நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே போலிகள் பெருகிவிட்டன. நல்லவர் போலவே நடித்து பஸ்ஸில் பக்கத்தில் உட்கார்ந்து இறங்கும்போது நம் பாக்கெட்டில் உள்ளதை எடுத்துக்கொண்டு போவது மட்டுமல்ல, பயன் தரும் மொபைல் செயலியை போன்று நடித்து, நம் போனிலுள்ள தகவல்களை களவாடுவதும் திருட்டுதானே! ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய 167 செயலிகளை கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது. இந்த மொபைல் செயலிகள் அனைத்தும் 1 கோடி (10 மில்லியன்) முறைக்கும் மேலாக டவுண்லோடு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்துமே குறிப்பிடத்தக்க பிரபலமான செயலிகளின் போலி பிம்பங்களாக உருவாக்கப்பட்டவை. இவற்றை தரவிறக்கம் செய்தததும், எதிர்பார்க்காத விளம்பரங்கள் ஸ்மார்ட்போனில் வரத் தொடங்கும்; ஸ்மார்ட்போனிலுள்ள தரவுகளுக்கும் இவை தீங்கை விளைவிக்கக்கூடும்.
கூகுள் ஏற்கனவே இவற்றை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கிவிட்டாலும், ஸ்மார்ட்போனில் இவற்றை டவுண்லோடு செய்திருந்தால் அழித்துவிட வேண்டும். கூகுளால் நீக்கப்பட்ட 167 மொபைல் செயலிகளுள் 37 மொபைல் செயலிகள் அதிகமாக டவுண்லோடு செய்யப்பட்டுள்ளன. வைஃபை கீ - ஃப்ரீ மாஸ்டர் வைஃபை, சூப்பர் போன் கிளீனர் 2020, ரிப்பேர் சிஸ்டர் ஃபார் ஆண்ட்ராய்டு & ஸ்பீடு பூஸ்டர், செக்யூர் கேலரி வால்ட்: போட்டோஸ், வீடியோஸ் பிரைவஸி சேஃப், ரிங்டோன் மேக்கர் - எம்பி3 கட்டர், நேம் ஆர்ட் போட்டோ எடிட்டர், ஸ்மார்ட் கிளீனர் - பேட்டரி சேவர், சூப்பர் பூஸ்டர், ரெயின் போட்டோ மேக்கர் - ரெயின் எஃபெக்ட் எடிட்டர், குரோனோமீட்டர், லௌடுசெட் அலாரம் கிளாக் எவர், ரிங்டோன் மேக்கர் அல்டிமேட் நியூ எம்பி3 கட்டர், வீடியோ மியூசிக் கட்டர் & மெர்ஜ் ஸ்டுடியோ, வைஃபை ஃபைல் டிரான்ஸ்பர் 2019, வைஃபை ஸ்பீடு டெஸ்ட், டபிள்யூபிஎஸ் டபிள்யூபிஏ வைஃபை டெஸ்ட், லாக் ஆப் வித் பாஸ்வேர்டு - ஆப்லாக் ஆல் ஆப் புரொடெக்டர், போட்டோ எடிட்டர் ஆசம் ஃபிரேம் எஃபெக்ட்ஸ் 3டி, லவ்டேஸ் மெமரி 2020 - லவ் கவுன்டர் டுகெதர், மேக்னிபைஃயர்
ஸூம் + ஃபிளாஷ்லைட், மேக்ஸ் கிளீனர் - ஸ்பீடு பூஸ்டர் ப்ரோ 2021, மோட்டோகிராஸ் ரேஸிங் 2018, நாக்ஸ் கூல் மாஸ்டர் - கூல் டவுண் 2020, ஓஎஸ் லாஞ்சர் - போன் 11 ப்ரோ லாஞ்சர், ஓஎஸ் லாஞ்சர் 12 ஃபார் ஐபோன் எக்ஸ், பேட்டரி சேவர் ப்ரோ 2020 - நியூ பவர் சேவர், பிளாக் பஸ்ஸில் 102 நியூ டென்ட்ரிஸ் மானியா, டிஜே மிக்ஸர் ஸ்டுடியோ 2018, ஜிபிஎஸ் ஸ்பீடோமீட்டர், கிராஃப்டி போட்டோ எடிட்டர் - கிராஃப்டி கிரியேட்டர், ஐஸ்வைப் போன் எக்ஸ், 3டி போட்டோ எடிட்டர், 3டி டாட்டூ போட்டோ எடிட்டர் & ஐடியாஸ், ஆப்லாக் 2020 - ஆப் லாக்கர் & பிரைவஸி கார்டு, ஆப்லாக் நியூ 20119 - பிரைவஸி ஸோன் & லாக் யுவர் ஆப்ஸ், அஸிஸ்டிவ் டச் 2020, ஆடியோ வீடியோ எடிட்டர், ஆடியோ வீடியோ மிக்ஸர்
இவை அதிகமாக டவுண்லோடு செய்யப்பட்டிருப்பதால் உங்கள் ஸ்மார்ட்போனிலும் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. மேற்கண்டவற்றுள் ஏதேனும் மொபைல் செயலி உங்கள் போனில் இருந்தால் அதை உடனடியாக அழித்து விடுவது ஸ்மார்ட்போனுக்கு பாதுகாப்பாகும்.