கொளத்தூரில் பொங்கல் விழா.. மனைவியுடன் ஸ்டாலின் பங்கேற்பு

by எஸ். எம். கணபதி, Jan 9, 2020, 10:12 AM IST
Share Tweet Whatsapp

சென்னை கொளத்தூர் தொகுதியில் நடந்த பொங்கல் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் உள்ள தனியார் அகடமி வளாகத்தில் நேற்று(ஜன.8) திமுக சார்பில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். துர்கா ஸ்டாலின், புதுப்பானையில் பொங்கல் வைத்தார்.


விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. விழாவில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களுடன் கோலங்கள் போடப்பட்டிருந்தன. அவற்றை ஸ்டாலின் பார்த்து ரசித்தார்.Leave a reply