கஜினி படத்தில் தொழிலதிபர் சஞ்சய் ராமசாமியாக வலம் வந்த சூர்யா ரசிகர்கள் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டார். தற்போது மீண்டுமொருமுறை சூர்யா தொழிலதிபராக வலம் வர உள்ளார்.
சூர்யா நடிப்பில் தற்போது ‘என்.ஜி.கே’, ‘காப்பான்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி கொண்டிருக்கின்ரன. என்.ஜி.கே படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படங்களைத் தொடர்ந்து சூர்யா இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவுடன் கூட்டணி அமைக்க இருக்கிறார்.
சூர்யாவின் திரைப்பயணத்தில் 38வது படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் சேர்ந்து ‘பீரியட்’ குறும்படத் தயாரிப்பாளர் கனித் மோங்கா தயாரிக்க இருக்கிறார். இந்த 'பீரியட்’ குறும்படம் சமீபத்தில் வழங்கப்பட்ட ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த ஆவணப்பட பிரிவில் விருது வென்றிருந்தது. இதற்கு 2டி நிறுவனம், பீரியட் குறும்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கனித் மோங்காவுக்கு வாழ்த்து சொல்லியிருந்தார்கள். அந்த வாழ்த்து செய்தியுடன் சூர்யா 38 படத்தில் இணைந்திருக்கும் செய்தியையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு இந்தச் சம்மரில் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லை, ஏர் டெக்கன் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையைதான் சுதா கொங்கரா சூர்யாவை வைத்து படமாக எடுக்க உள்ளாராம்.