பிரித்விராஜ் இயக்கும் படத்தில் மோகன்லால் – எதை பற்றிய கதை தெரியுமா

நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகும் `லூசிஃபெர் ' படத்தில் நடிகர் மோகன்லால் நடித்து வருகிறார்.  



பிரித்விராஜ்

நடிகர் பிரித்விராஜ் மலையாள நடிகர்களில் முன்னணி நடிகர் . தமிழ் தெலுங்கு , பாலிவுட் என அனைத்து மொழி படங்களிலும் நடித்தவர். தமிழ் சினிமாவில் கனா கண்டேன் படத்தில் அறிமுகமாகிய இவர் பாரிஜாதம் , மொழி , அபியும் நானும் , ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர் , பாடகர் , தயாரிப்பாளர் என அனைத்து பன்முகம் கொண்ட இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். .

இயக்குனராக இவர் இயக்கும் முதல் படம் 'லூசிஃபெர் '.  மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால்   இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தளபதி விஜய் உடன்   ஜில்லா , சூர்யாவுடன் காப்பான் போன்ற படங்களில் தமிழ் நடித்து இருக்கிறார். ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் மோகன்லால்  மற்றும் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் மலையாளத்தில் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர்களுடன்  விவேகம் புகழ் விவேக் ஓபராய் , மாரி 2 புகழ் டோவினோ தாமஸ் , இந்திரஜித், ஜான் விஜய் ,சுரேஷ் மேனன் , கலாபவன் சாஜன் ஆகியோருடன்  பிரித்விராஜ்  கெளரவ  வேடத்தில்  நடித்துள்ளார்.

நடிகர் , திரைக்கதை ஆசிரியர், பாடகரான முரளி கோபி அவர்கள் இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார்.

புலிமுருகன் படத்திற்கு வசனம் எழுதிய ஆர்.பி. பாலு இந்த படத்திற்கு வசனம்  எழுதியுள்ளார். சுஜித் வாசுதேவ்  ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் சாதுமிரண்டா படத்திற்கு இசையமைத்த தீபக் தேவ் இப்படத்திற்கு  இசையமைக்க, சம்ஜித் முஹமது படத்தொகுப்பினை மேற்கொள்கிறார். கலை  இயக்கம் மோகன் தாஸ் , சண்டைப்பயிற்சி ஸ்டண்ட்  சில்வா , நடனம் தினேஷ் மேற்கொள்கின்றனர். 

இத்திரைப்படம் தமிழ், மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள அரசியல் கலந்த த்ரில்லர் படம். இந்திய அரசியல் படமாக இருக்கும் இது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும்  அரசியல் தொடர்புகளை இப்படம் பேச இருக்கிறது. இப்படத்தின்  படப்பிடிப்பு திருவனந்தபுரம் . கொச்சின், மும்பை , லட்சதீவு , பிரான்ஸ் , ரஷ்யா  ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டது. தற்போது படத்தின்  இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது .

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
priya-bhavani-shankar-act-with-vishnu-vishal
பிரியா பவானி சங்கர் காட்டில் பட மழை!
after-bigil-audio-launch-vijay-travel-to-foreign
பிகில் இசை வெளியீட்டுக்கு பிறகு வெளிநாடு சென்ற விஜய்!
2020-oscar-nomination-indian-movie-list-revealed
தேசிய விருதுலயே ஏமாத்திட்டாங்க ஆஸ்கருக்கு பரிந்துரைப்பாங்களா தமிழ் படங்களை?
case-filed-against-on-vivegam-producer
அஜித் பட தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு
hanshika-undergone-a-surgery-for-reducing-fat
உடல் இளைத்த ஹன்சிகா,. அறுவை சிகிச்சை காரணம்..
comedy-actor-sathish-got-engaged
காமெடி நடிகர் சதிஷ் இனி கமிட்டட்!
director-vzdurai-is-to-direct-simpu-and-vijay-antony-films-soon
சிம்பு, விஜய் ஆண்டனி படங்களை இயக்கும் துரை
sivakarthikeyan-scifi-movie-resume-in-november
சிவகார்த்திகேயனின் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்திற்கு என்ன ஆச்சு தெரியுமா?
biggboss-season-4-anchor-name-revealed
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொகுப்பாளர் யார் தெரியுமா?
happy-birthday-atlee
ஆவி பறக்கும் அட்லிக்கு ஹாப்பி பர்த்டே!
Tag Clouds