ட்ரெய்லர் அதி பயங்கரம்! – மிரட்ட வருகிறாள் ஐரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம் `ஐரா’.

airaa

ஐரா திரைப்படத்தை  'லக்‌ஷ்மி','மா' குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தையும் இயக்கிய சர்ஜுன் இயக்குகிறார்.     லக்ஷ்மி குறும்படம் வெளியாகி பெரும் பேசு பொருளாக மாறியது அனைவரும் அறிந்ததே. எனவே `ஐரா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. இந்தப்படத்தில் முதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.    இந்த படத்தின் டீசர் மற்றும் புரமோ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

நயன்தாரா இப்படத்தில் ஒரு கோகிலா' படத்தில் கலக்கிய யோகி பாபு, 'தர்மதுரை' படத்தில் நடித்த திருநங்கை ஜீவா உள்ளிட்டவர்கள் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.  'அறம்' படத்தைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார்.  இப்படம் வரும் 28 ஆம் தேதி வெளியாகிறது.

இன்று ஐரா ட்ரெய்லர் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.

Trailer Link : https://goo.gl/mu3SUP

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்