12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் `ஹிட்’ பாடல் ஜோடி.. இந்த முறையும் ஹிட் டூயட் கொடுப்பார்களா

லைகா நிறுவனம் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியாக இருக்கும் சூர்யாவின் 37வது திரைப்படம் காப்பான்.  சூர்யாவுடன் மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  படத்தின் பெரும் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், பாடல்காட்சிகள் படமாக்கும் வேலையில் இருக்கிறார்கள் படக்குழுவினர்.

சூர்யா காப்பான்

சூர்யா - சயிஷா இருவருக்கும் இடையிலான காதல் பாடல் ஒன்று படமாக்கவிருக்கிறார்கள்.  அதற்கான பாடல் பதிவு வேலைகள் அண்மையில் நடந்தது. அந்தப் பாடலை பொன்னி தயாளும் தர்ஷனாவும் இணைந்து பாடியுள்ளனர். சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், கடந்த 2007ல் விஜய் நடிப்பில் வெளியான அழகிய தமிழ் மகன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தெறி ஹிட்டான ‘மதுரைக்கு போகாதடி...’  பாடலைப் இவர்களே இணைந்து பாடினர். 12  வருடங்கள் கழித்து பொன்னி தயாளும் தர்ஷனாவும் இணைந்து பாடும் பாடல் இது. கூடுதல் தகவல் என்னவென்றால், அந்த பாட்டின் மூலமாக தான் தர்ஷனா பாடகியாக அறிமுகமானார்.

காப்பான் படத்துக்காக ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் கபிலன் வரிகளில் பொன்னி தயாளும் தர்ஷனாவும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் பெரிய வரவேற்பையும் பெறும் என்று சொல்லப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
மேலும் செய்திகள்
We-do-not-freedom-speech-express-good-opinions-Film-director-SA-Chandra-Sekar
நல்ல கருத்துகளையும் கூற முடியவில்லை; பேச்சு சுதந்திரமும் இல்லை - இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை
vickram-enjoyed-on-watching-Kadaram-kondan-in-kasi-theatre-with-fans
கடாரம் கொண்டான் ரிலீஸ், தியேட்டருக்கு வந்த விக்ரம்; ரசிகர்கள் ஆரவாரம்
Tanjore-Tamil-girl-mastered-in-Rap-Music-world
ராப் இசையில் கலக்கும் தஞ்சாவூர் பொண்ணு ஐக்கி பெர்ரி!
Bigil-Song-Leaked-and-goes-viral-movie-crew-was-shocked
லீக்கானது பிகில் பட பாட்டு; அப்செட்டில் விஜய், ஏ.ஆர். ரஹ்மான்!
Man-arrested-for-harrassing-Bengali-actress-Arunima-Ghosh-on-social-media
பிரபல வங்காள நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் 'பாலியல் தொல்லை'! மர்ம நபர் கைது
Kangana-Sister-blame-Tapsee-directly-and-a-cold-war-started-in-bollywood
பாலிவுட்டில் டாப்ஸி கிடு கிடு வளர்ச்சி; கடுப்பில் கங்கனா குடும்பம்!
Three-Bollywood-Actors-play-villain-role-against-Super-star-Rajinikanth
ரஜினியுடன் மோதும் 3 பாலிவுட் நடிகர்கள்!
Aadai-Movie-Director-cries-for-India-loss-in-World-Cup-semis
ஆடை பட இயக்குநரை அழ வைத்த தோனி!
Kaappan-Satellite-rights-bagged-by-Sun-tv
காப்பான் சேட்டிலைட் ரைட்ஸை வாங்கிய சன் டிவி!
Tomorrow-six-movies-will-be-release-in-kollywood
நாளைக்கு 6 படங்கள் ரிலீஸ்! ஜெயிக்கப்போவது யாரு?
Tag Clouds