ஒரே ஒரு போட்டோ கேட்டோம் தர்ம அடிதான் கிடைச்சுது! விஜய் சேதுபதியின் திடீர் மாற்றத்தால் குமுறும் ரசிகர்கள்.

by Sakthi, Apr 16, 2019, 15:17 PM IST

விஜய்சேதுபதிக்கும் ரசிகர்களுக்கும் இடையில் எப்போதுமே ஒரு பிரிக்க முடியாத பந்தம் இருக்கும். எங்கு சென்றாலும் ரசிகர்களை பார்ப்பதும், பேசுவதும், முத்தம்
கொடுப்பதுமாக என்றுமே ரசிகர்களின் நடிகனாகவே இருப்பார் விஜய்சேதுபதி. இப்போது அந்த ரசிகர்கள் இடையிலான பந்தத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

விஜய் சேதுபதி

சமீபத்தில் விஜய்சேதுபதியின் படப்பிடிப்பு ஒன்று பாண்டிச்சேரியில் நடந்தது. விஜய்சேதுபதியின் படப்பிடிப்பு தளத்துக்கு சென்றால் நிச்சயம் ரசிகர்களால் அவருடன்
போட்டோ எடுத்துவிட முடியும். ஒரு முத்தத்தையும் பரிசாக வாங்கிவிட முடியும். ஆனால் இப்போது நிலை அப்படியில்லை என்பதே காரணம். ஏனெனில் விஜய்சேதுபதி
எங்கு சென்றாலும் பவுன்சர்ஸ்களுடன் தான் செல்கிறார். சமீபத்தில் பாண்டிச்சேரி படப்பிடிப்பில் விஜய்சேதுபதியின் ரசிகர்கள், அவருடன் புகைப்படம் எடுக்க
காத்திருந்திருக்கின்றனர். ஆனால் பவுன்சர்கள் விடவில்லை. அந்த நேரத்தில் விஜய்சேதுபதி, தான் படத்துக்கான கெட்டப்பில் இருப்பதாகவும், நாளை போட்டோ எடுக்கலாம்  என்று கூறி அனுப்பியிருக்கார்.

அடுத்த நாளும் ரசிகர்கள் வந்துவிட்டனர். படப்பிடிப்பு முடிய இரவாகியிருக்கிறது. அதுவரைக்கு ரசிகர்களும் காத்திருந்திருக்கின்றனர். இரவு ரொம்ப களைத்துவிட்ட
விஜய்சேதுபதி வேறோரு நாள் போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறார். விடாத ரசிகர்கள், சேதுபதி தங்கியிருக்கும் விடுதி வரை துரத்தி சென்றிருக்கிறார்கள்.
அங்கு பவுன்சர்களுக்கு ரசிகர்களுக்கும் இடையே தகராறும், சர்ச்சையும் ஏற்பட்டிருக்கிறது. எதையுமே விஜய்சேதுபதி கண்டுகொள்ளவில்லையாம். எப்போதுமே
விஜய்சேதுபதை பார்க்க சென்றால் சர்க்கரைப் பொங்கல் கிடைக்கும். ஆனால் இந்த முறை தர்ம அடி கிடைத்திருப்பதால் ரசிகர்களும் விஜய்சேதுபதி மீது கடும் கோவத்தில்
இருக்கிறார்கள். ``ஒரே ஒரு போட்டோ கேட்டோம். தர்ம அடிதான் கிடைச்சுது’’ என விஜய் சேதுபதியின் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். 

 

ஜூலையில் தொடங்கும் மணிரத்னத்தின் `வானம் கொட்டட்டும் படபப்பிடிப்பு

இந்தியாவில் சிறந்த நடிகர் சூர்யா.. ஆஸ்கர் விருது வென்ற பிரபலம் பாராட்டு

பொதுவெளிக்கு வந்த குடும்ப தகராறு.. சங்கீதாவுக்கும் அம்மாவுக்கும் என்னதான் பிரச்னை

96 கன்னட ரீமேக்.... கொஞ்சம் கூட ஃபீல் கொடுக்காத 99 டிரெய்லர்

இயக்குநர் பாலாவினால் பணநெருக்கடியில் சிக்கி தவிக்கும் சசிகுமார்


More Cinema News