நடிகர் சிம்புவின் திருமணம் குறித்துப் பேசியிருக்கிறார் டி.ராஜேந்தர்.
தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. காதல் தோல்வி சர்ச்சைக்கும் பெயர் போனவர் இவரே. 36 வயதாகும் சிம்புக்கு எப்ப திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவரின் இளைய சகோதரன் குரளரசனுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. அவர், காதலித்த பெண்ணுடன் வரும் ஏப்ரல் 29ம் தேதி குறளரசன் திருமணம் வரவேற்பு நடக்க உள்ளது.
இந்நிலையில், சிம்புவின் திருமணம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார் டி.ராஜேந்தர். சிம்புக்கு விரைவில் மணப்பெண் கிடைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. சிம்புவிற்கு அவரோடு நடித்த பெண்ணை விட அவருக்குப் பிடித்த பெண்ணோடு திருமணம் நடக்கவே ஆசைப்படுகிறேன் எனக் கூறியுள்ளார்.
நயன்தாராவும், சிம்புவும் ஒரு காலத்தில் காதலித்து, காதலராக வாழ்ந்து பின் பிரிந்தார்கள். அதன் பிறகு, சிம்புவும், ஹன்சிகாவும் `வாலு' படத்தில் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் பற்றிக் கொண்டது. இவர்களின் காதல் அடுத்த கட்டத்தை நோக்கி போவதற்குள், இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது பிரிந்து விட்டார்கள். இவர்களில் யாரை குறிப்பிட்டு டி.ராஜேந்தர் பேசினார் என்ற தற்போது சந்தேகம் எழுந்துவிட்டது.