`விஜய் அண்ணான்னு நீங்க சொன்னப்பவே எல்லாம் சால்வ் ஆகிடுச்சி - நேர்மையாக நடந்து கொண்ட விஜய் ரசிகர்கள்

Advertisement

நடிகர் விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுவதாக கூறி, நடிகர் கருணாகரன் டிவிட்டரில் மன்னிப்பு கோரியுள்ளார். அவரிடம் விஜய் ரசிகர்களும் மன்னிப்பு கேட்டுள்ளனர்.


விஜய் ரசிகர்கள்

 

நடிகர்  கருணாகரன் ட்விட்டரில் அரசியல், சினிமா சம்பந்தமான கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்பவர். சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு சர்ச்சையை கிளப்பியது. அவரது கருத்தை பலரும் விமர்சித்தனர். ஆனால் அதற்கு நடிகர் விஜய் எந்த விளக்கமும் கூறவில்லை.

கருணாகரன்

இந்நிலையில் விஜய் பேச்சு குறித்து ட்விட்டரில் பதிவிட்ட நடிகர் கருணாகரன், "குட்டிக்கதை அரசியல்வாதிகளுக்கு மட்டுமா? அல்லது நடிகர்களுக்குமா? தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று உங்கள் ரசிகர்களிடம் சொல்லுங்கள் நண்பா" என்று ட்வீட் செய்திருந்தார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் சீற்றத்தை உருவாக்கியது. டிவிட்டரில் கருணாகரனுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே உச்சக்கட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. விஜய் ரசிகர்கள் கருணாகரனை தொடர்ந்து ட்ரோல் செய்தனர். இவரும் அதற்கு பதிலுக்கு பதில் கொடுத்து வந்தார். விஜய் ரசிகர்களின் செயல்களால் விஜய்யை வெறுக்க தொடங்கியதாக அவர் பதிவிட்டார். இந்த கருத்தால் ரசிகர்களின் கோபம் அதிகரித்தது.

கருணாகரன்

கருணாகரனின் தொலைபேசி எண்ணை விஜய் ரசிகர்கள் இணையத்தில் பகிர, பலரும் அவரை போன் போட்டு திட்டித் தீர்த்தார்கள். இச்சம்பவம் முடிவே இல்லாமல் தொடர்ந்தது. ஒருக்கட்டத்தில் கடுப்பான கருணாகரன் , டிவிட்டர் தளத்திலிருந்தே விலகினார். மீண்டும் டிவிட்டருக்கு வந்த கருணாகரன், விஜய் ரசிகர்கள் விவகாரத்தில் வெறுப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்க கூடாது’ என்று பதிவிட்டார். `எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர்களில் விஜய் அண்ணாவும் ஒருவர். தாம் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன்’ என பதிவிட்டார். அவரின் பதிவுக்கு தற்போது விஜய் ரசிகர்கள் பதில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள்

சிலர் ``என்னப்பா இப்படி யூடர்ன் அடிச்சிட்ட.. விஜய் படத்துல வாய்ப்பு வந்துடுச்சா’’ என்று கலாய்க்கின்றனர். ஆனால் விஜய் ரசிகர்கள் பலர் உங்கள் தவறை உணர்ந்ததில் சந்தோஷம் நாங்களும் ரொம்ப கலாய்ச்சிட்டோம். மன்னிச்சிடுங்க’’ என்று நேர்மையாக பதிவிட்டுள்ளனர்.

இன்னொரு ’சர்கார்’ வந்தால் தான் இதற்கு தீர்வு கிடைக்குமா? – நடிகர் ரமேஷ் கண்ணா ஆவேசம்

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>