எம்.எஸ். தோனி படத்தில் அறிமுகமாகி லஸ்ட் ஸ்டோரி படத்தின் மூலம் உலகம் முழுக்க பிரபலமான கியாரா அத்வானி தான் ஹிந்தி காஞ்சனா படத்தின் ஹீரோயின்.
தமிழில் வெற்றியடைந்த காஞ்சனா முதல் பாகத்தை லக்ஷ்மி பாம் என்ற பெயரில் நடிகர் அக்ஷய்குமாரை வைத்து இயக்குகிறார் ராகவா லாரன்ஸ்.
இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று ஆரம்பமானது. நடிகர் அக்ஷய் குமார் மற்றும் நாயகி கியாரா அத்வானியுடன் இணைந்து லாரன்ஸ் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கியுள்ளார்.
காஞ்சனா படத்தில் தமிழில் ராய் லக்ஷ்மி நடித்திருந்த நிலையில், இந்தியில் கியாரா அத்வானி நடிக்கிறார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பரத் அனெ நேனு படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தெலுங்கிலும் பிசியாக நடித்து வரும் கியாரா அத்வானி, பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் கலக்கி வருகிறார்.