அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் நேற்று உலகம் முழுவதும் ரிலீசானது. சீனாவில் ஒரு நாள் முன்பே ரிலீசானது. இந்நிலையில், உலகம் முழுவதும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் கடந்த இரு தினங்களில் 2,130 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய உள்பட நேற்று உலகில் உள்ள 45 நாடுகளில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ஈட்டிய வசூல் 1,403 கோடி வசூலை ஈட்டியுள்ளது. சீனாவில் கடந்த 2 தினங்களில் 747 கோடி ரூபாய் வசூலை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் குவித்துள்ளது.
இந்த வார இறுதியில் 5 ஆயிரம் கோடி வசூலை உலகம் முழுவதும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வெளியிடப்பட்ட ப்ரிவ்யூ காட்சிகளில் மட்டும் 419 கோடி ரூபாய் வசூலை ஈட்டி ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ் படத்தின் அதிகபட்ச வசூலான 398 கோடி வசூலை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் மட்டும் முதல் நாள் வசூலாக அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் 45 கோடி ரூபாயை ஈட்டியுள்ளதாகவும், தமிழகத்தில், காஞ்சனா 3 ஓடி வருவதால், 5 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது என்றும் பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ருசோ சகோதரர்கள் இயக்கிய மார்வெல் திரையுலகின் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் உலகளவில் மேலும், மிகப்பெரிய வசூல் சாதனையை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.