சூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்தின் ஷூட்டிங் மும்பையில் படு ஸ்பீடாக நடைபெற்று வருகிறது. அதேபோல. ராகவா லாரன்ஸும் காஞ்சனா இந்தி ரீமேக்கிற்காக மும்பையில் குடி கொண்டுள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்தை சந்தித்த ராகவா லாரன்ஸ் அவரிடம் ஆசி பெற்றுள்ளார்.
ராகவா லாரன்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான காஞ்சனா 3 படம் 130 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டு இருக்கிறது.
அடுத்ததாக அக்ஷய்குமாருடன் பாலிவுட்டில் காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் இயக்கி வருகிறார் லாரன்ஸ்.
இந்நிலையில், தர்பார் ஷூட்டிங்கில் இருக்கும் ரஜினிகாந்தை சந்தித்த லாரன்ஸ் அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். காஞ்சனா 3 படத்தின் வெற்றிக்கும் பாலிவுட்டில் அக்ஷய்குமாரை இயக்கப் போவதற்கும் சேர்த்து ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளை ராகவா லாரன்ஸுக்கு தெரிவித்துள்ளார்.
லாரன்ஸுடன் காஞ்சனா 3 நடிகை வேதிகாவும் ரஜினியை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.