50 நாளைக்கு முன்பே இந்த அலப்பறையா? இந்தியளவில் டிரெண்டான தலைவா விஜய்!

நடிகர் விஜய்யின் பிறந்த நாளைக்கு இன்னும் 50 நாட்கள் இருக்கும் நிலையில், அவரது தீவிர ரசிகர்கள் தற்போதே, பிறந்த நாள் கொண்டாட்டத்தை சமூக வலைதளங்களில் தொடங்கி விட்டனர். ட்விட்டரில் தலைவா விஜய் என்ற ஹேஷ் டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது.

நடிகர் விஜய்யின் பிறந்த நாள் வரும் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால், 50 நாளைக்கு முன்பாகவே அவரது ரசிகர்கள் விஜய் பிறந்த நாள் திருவிழாவை கொண்டாட தொடங்கி விட்டனர். சமூக வலைதளங்களில் 50 டேஸ் டு விஜய் பர்த்டே என்ற ஹேஷ்டேகும், தலைவா விஜய் என்ற ஹேஷ்டேகும் வைரலாகி வருகின்றன.

மேலும் சில தீவிர தளபதி ரசிகர்கள் விஜய் பிறந்த நாள் வர இன்னும் 50 நாட்கள் தான் இருக்கின்றது என போஸ்டர்கள் அடித்தும் ஒட்டியுள்ளனர். விஜய் ரசிகர்கள் செய்யும் இந்த அலப்பறைகளை பார்த்து பொறுக்க முடியாத அஜித் ரசிகர்கள் மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் இந்தியாவில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சில ரசிகர்கள் மார்வெல் டைட்டில் டிராக் போல விஜய்யின் படங்களை சின்ன அனிமேஷன் வீடியோவாகவும் உருவாக்கி பதிவிட்டு வருகின்றனர்.

இந்த ரசிகர்களின் ஏக்கம் ஜூன் 22ம் தேதியன்று தளபதி 63 படத்தில் இருந்து ஒரு நல்ல அப்டேட் கிடைக்குமா என்பது மட்டும் தான்.

தயாரிப்பாளராகும் விஜய்; சொந்த தயாரிப்பில் தானே நடிக்கவும் திட்டம்!

Advertisement
More Cinema News
actress-chandini-signs-with-balaji-sakthivel-radha-mohan
ராதாமோகன் இயக்கத்தில் சாந்தினி...
sai-dhanshika-met-rajini-at-darbar-set
இமயமலை செல்வதற்குமுன் ரஜினியை சந்தித்தது ஏன்? சாய் தன்ஷிகா விளக்கம்
ganesh-and-srushti-lead-pair-in-kattil
இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது ஏன்?.. சிருஷ்டி டாங்கே பதில்..
rio-raj-and-ramya-nambeesan-pair-up-for-badri-venkatesh
ரியோ ராஜுக்கு ஜோடிபோடும் ரம்யா நம்பீஸன்..
newly-weds-arya-sayyeshaa-team-up-for-teddy
திருமணத்துக்கு பின் ஆர்யா-சாயிஷா இணையும் டெடி
mammootty-collaborates-with-director-ram-again
பேரன்பு படத்துக்கு பிறகு மம்மூட்டியுடன் இணையும் இயக்குனர் ராம்...
keerthy-suresh-turns-down-rana-daggubatis-film
கீர்த்தி நடிக்க மறுத்த வேடத்தில் நயன்தாரா.. ராணா தயாரிக்கும் கொரிய மொழிப்படம்..
an-international-cricket-star-irfan-pathan-joined-vikram-58
விக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..
international-cricketer-tweets-about-thalapathys-bigil-trailer
விஜய் படத்துக்கு டிகெட் கேட்ட கிரிகெட் வீரர்..
actress-andreajeremiah-worried-about-film-offer
படங்களை ஏற்க மறுத்த ஆண்ட்ரியா திடீர் வருத்தம்..
Tag Clouds