லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் திருமணம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகையாக தனக்கென தனி இடத்தை தொடர்ந்து தக்கவைத்து வருபவர் நயன்தாரா. அவர் கையில் எடுக்கும் எந்த படமென்றாலும் ஹிட் ரகம் தான். ஒரு கட்டத்தில் நாயகி முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்தார்.அதிலும் வெற்றிப் பாய்ச்சல் தான். இந்நிலையில் நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்ததாக தகவல்கள் வெளியாகின. அந்த தகவலுக்கு முற்றுப் புள்ளி வைத்தது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த நானும் ரவுடி தான் படம்.
எக்மோரில் இருக்கும் நயன்தாராவின் வீட்டில் தான் விக்னேஷ் சிவன் வசிக்கிறார் என்றும், நயனின் எந்த படமென்றாலும் கதை கேட்டு ஒப்பந்தம் செய்வதும் விக்னேஷ் தான் என்றும் செய்திகள் வெளியாகின. அதுமட்டுமின்றி, இருவரும் புகைப்படங்களை மாறி மாறி இணையத்தில் பறக்கவிட்டு காதலை ஜாடையாக உறுதிசெய்தனர்.
நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் எப்பொழுது திருமணம் என்பதே ரசிகர்களின் ஏகோபித்த கேள்வி. 100 படங்கள் முடித்த பிறகு தான் திருமண பேச்சை எடுக்க வேண்டும் என்று நயன்தாரா கரார் காட்டி வருகிறார். ஆனால் சமீபத்தில் விக்னேஷ் சிவன் குடும்பத்தாரை சந்தித்தார் நயன். அவர்கள் விரைவில் திருமணம் செய்து வைத்தாக வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். விக்னேஷ் சிவனின் கருத்தும் அதுவே.
இந்த வருட இறுதியான நவம்பர் மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த வருட தொடக்கத்தில் இவர்களது திருமணம் நடைபெற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விஜய்யுடன் தளபதி 63 மற்றும் ரஜினியுடன் தர்பார் படங்களில் தற்பொழுது நடித்துவருகிறார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.
நெருக்கடி கொடுக்கும் விக்னேஷ் சிவன் குடும்பம்.. விரைவில் நல்ல சேதி சொல்வாரா நயன்தாரா
Advertisement