ஒரே இரவில் ஒட்டுமொத்த வேலைகளையும் முடித்த படக்குழு.. சிவகார்த்திகேயன் பட அப்டேட்ஸ்

Advertisement

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படங்களின் அறிவிப்புகள் இரண்டு நாட்களாக தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. அது ஏன்? என்ன காரணம்...?

சிவகார்த்திகேயன்


அறிவிப்பு 1: மிஸ்டர் லோக்கல் படப்பிடிப்பு நிறைவு !
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தான் முடிந்ததாக படக்குழு அறிவித்தது. அதை கேக் வெட்டி படக்குழு கொண்டாடியிருந்தது. ஆனால் படம் வருகிற 17ஆம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது. பட ரிலீஸூக்கு பத்து நாட்கள் முன்பு தான் படப்பிடிப்பு முடிந்ததா என்று கேள்வி எழலாம்.

படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டிருந்தாலும் பேட்ஜ் வேலைகள் மட்டும் பாக்கி இருந்ததாம். அதை மே 2ஆம் தேதி படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் ராதிகா மலையாள படமொன்றில் பிஸியாக இருந்ததால் வரவில்லை. அதனால் நேற்று ஓரிரவிலேயே பேட்ஜ் வேலைகளை முடித்து, அன்றைய இரவே எடிட்டிங், DI உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் முடித்திருக்கிறது படக்குழு.

அறிவிப்பு 2: பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!

பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் 16வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் நடிக,நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த தகவலை இரண்டு தினங்களாக ஒன்றன் பின் ஒன்றாக அறிவித்துவருகிறது.

சிவகார்த்திகேயன்


சிவாவுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் ஒப்பந்தமாகியுள்ளார். முக்கிய கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ், நட்டி (எ)நட்ராஜன், ஆர்.கே.சுரேஷ்,பாரதிராஜா, சமுத்திரக்கனி காமெடி டிராக்கில் யோகிபாபு மற்றும் சூரி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். தவிர, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பினை கவனிக்கிறார். கலை இயக்கத்தை வீரசமர் மேற்கொள்கிறார். படத்துக்கு இமான் இசையமைக்கிறார்.  இப்படி அடுத்தடுத்து அறிவிப்புகளை பட நிறுவனம் அவசர அவசரமாக வெளியிட காரணம், படப்பிடிப்பை (மே - 8)இன்று தொடங்குகிறது படக்குழு. அதனால் தான் நேற்றே படக்குழுவை அறிவித்தது தயாரிப்பு தரப்பு.

மிஸ்டர் லோக்கலுடன் மோதல் இல்லையா? மீண்டும் தள்ளிப் போகிறதா விஜய்சேதுபதி படம்?

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>