பிக்பாஸ் சீசன் 3 ஆரம்பம் கமல் தான் தொகுத்து வழங்குகிறார்! போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

by Mari S, May 8, 2019, 16:58 PM IST
Share Tweet Whatsapp

2017ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என அசத்தல் புரொமோ வீடியோவை வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

ஆங்கிலத்தில் பிக் பிரதர் என்ற பெயரில் வெளியான இந்த நிகழ்ச்சி பாலிவுட்டில் 11 ஆண்டுகளாக சல்மான் கான் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் தொகுத்து வழங்கி வந்தனர்.

இந்நிலையில், தமிழில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால், அந்நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ஆடியன்ஸ் குவிந்தனர்.

முதல் இரண்டு சீசன் வெற்றிக்குப் பின்னர் மூன்றாவது சீசனில் கமல் இடம்பெறமாட்டார் என்ற செய்திகள் பரவின. அதற்கு காரணம் அவரது அரசியல் பிரவேசம் தான். ஆனால், இன்று இவிபி படப்பிடிப்பு தளத்தில் பிக்பாஸ் வீட்டு செட்டில் கமலின் ஷூட்டிங் தொடங்கியுள்ள தகவல் கிடைத்துள்ளது.

விரைவில் 3வது சீசனுக்கான புரொமோஷன் வீடியோ வெளியாகி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

இந்த முறை பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ள 3 போட்டியாளர்கள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. நடிகை லைலா, நடிகை சுதா சந்திரன் மற்றும் நடிகை சாந்தினி ஆகிய மூன்று பேரும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வது உறுதியாகியுள்ளது. மற்ற போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் உரிமை விஜய் டிவியில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு சென்று விட்டதாகவும் செய்திகள் வெளியான நிலையில், மீண்டும் விஜய் டிவியிலேயே பிக்பாஸ் 3 ஒளிபரப்பாகும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.


Leave a reply