சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் பெயர் நீதிதேவன் என்ற தகவல் கசிந்துள்ளது.
மேலும், இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் பாலிவுட் நடிகை வித்யா பாலன் பெயர் குணவதி தேவன் என வைக்கப்பட்டுள்ளதாம்.
அஜித்துக்கு எதிராக வழக்காடும் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கும் ரங்கராஜ் பாண்டேவிற்கு தயாளன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாம்.
பாலிவுட்டில் டாப்ஸி நடித்த படத்தின் முக்கியமான ரோலில் நடிக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு மீரா என்ற பெயரும், திரிஷா இல்லன்னா நயன்தாரா மற்றும் சிம்புவின் டிரிபிள் ஏ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தில் ஷிவ்ராஜ் என்ற கதாபாத்திரப் பெயரில் நடித்துள்ளார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி நேர்கொண்ட பார்வை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்களின் கதாபாத்திரப் பெயர்கள் இணையத்தில் கசிந்துள்ளது படக்குழுவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.