இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள தேவி 2 படம் வரும் மே 31ம் தேதி ரிலீசாகிறது.
இந்த படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, முதல் பாகத்தை போலவே அருமையாக நகைச்சுவை செய்து படம் முழுக்க உங்களை சிரிக்க வைக்க காத்துக் கொண்டிருக்கிறார் என படக்குழு சார்பில் ஒரு விளம்பர புரமோஷன் வெளியானது.
அதனை சினிமா விமர்சகர் மற்றும் சினிமா புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீதர் பிள்ளை தனது ட்விட்டரில் பதிவிட்டார். அவரது பதிவை பார்த்து டென்ஷனான ஆர்.ஜே. பாலாஜி, இது முற்றிலும் தவறான விளம்பரம் என்றும் அந்த படத்தில் தான் 2 காட்சிகளில் மட்டுமே கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாகவும், வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான எல்கேஜி படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவரை முன்னிறுத்தி படத்தை புரமோஷன் செய்ய நினைத்த படக்குழுவுக்கு இப்படியொரு சங்கடத்தை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ஏற்படுத்தியுள்ளார்.
ஒருவேளை தேவி 2 படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படக்குழுவினரால், புறக்கணிக்கப்பட்டிருக்கலாம். அல்லது கூறிய சம்பளத்தை குறைத்தோ அல்லது வழங்காமலோ இருந்திருப்பார்கள் அதனால், தான் ஆர்.ஜே.பாலாஜி புரமோஷனுக்கு இப்படியொரு ஃபுல் ஸ்டாப் வைத்துள்ளார் என கமெண்டில் கிசுகிசுத்து வருகின்றனர்.