எம்.ஜி.ஆர்.- ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தல் நடத்தக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Advertisement

நடிகர் சங்கத் தேர்தல் திட்டமிட்டபடி வரும் 23-ந் தேதி நடக்குமா? என்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்.- ஜானகி கல்லூரியில் தேர்தலை நடத்தக் கூடாது என்றும், வேறு இடத்தை தேர்வு செய்யுங்கள் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ந் தேதி சென்னை அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணிக்கும், பாக்கியராஜின் சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே பல்வேறு சர்ச்சைகளும் சுற்றிச் சுழன்றடிக்கின்றன. இந்தத் தேர்தலை ரத்து செய்வதற்கோ, தள்ளிப் போடுவதற்கோ தொடர்ந்து முயற்சிகள் நடப்பதாக விஷால் அணியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சங்கத்தில் இருந்து 61 உறுப்பினர்களை ஏன் நீக்கினீர்கள் என்று கேட்டு, தமிழக அரசின் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து நடிகர் சங்கத்திற்கு நோட்டீஸ் வந்தது. இதற்கு சங்கத்தின் தலைவர் நாசர் விளக்கம் அனுப்பியிருந்தார்.

இதே போல், தேர்தல் நடைபெறும் கல்லூரியானது, முதலமைச்சர், நீதிபதிகள் செல்லும் பாதையில் இருப்பதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது சிரமம் என்று காவல் துறை கூறியது. இதன்பின், தேர்தல் அமைதியாக நடத்தப்படும் என்றும்,காவல் துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் விஷால் அணியினர் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர்.

ஆனாலும், அந்த கல்லூரியில் தேர்தல் நடத்துவதற்கு காவல் துறை இது வரை அனுமதி தரவில்லை.

இதனால் எம்.ஜி.ஆர் - ஜானகி கல்லூரியில் தேர்தலை நடத்த அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், எம்.ஜி.ஆர்.- ஜானகி கல்லூரியில் தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத ஒரு இடத்தை தேர்வு செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் இடைவெளியே உள்ள நிலையில், புதிய இடத்தை உடனடியாக தேர்வு செய்ய முடியுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் 23-ந் தேதி திட்டமிட்டபடி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது.

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்த பாக்யராஜ் அணி சதித் திட்டமா?

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>