பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம், இயக்குனர் பூரி ஜெகன்னாத் தயாரிப்பில் இஸ்மார்ட் சங்கர் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு காட்சிகள் கடந்த 2 தினங்களாக ஹைதராபாத் சார்மினார் அருகே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று குல்ஜார் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. படப்பிடிப்பு இடைவேளையில் நடிகர் ராம் சிகரெட் பிடித்து உள்ளார்.
இதனை கவனித்த சார்மினார் காவல் நிலைய எஸ் ஐ பண்டரி ராம் மீது 2003 சட்டப்பிரிவு 4 ன் படி பொது இடத்தில், கூட்டம் அதிகம் உள்ள இடத்தில் சிகரெட் பிடிப்பதற்காக 200 ரூபாய் அபராதம் விதித்தார். இதையடுத்து நடிகர் ராம் அபராத தொகையை உடனடியாக செலுத்தினார் .இருப்பினும் சினிமா படப்பிடிப்பின் ஒரு காட்சியாக நடிகர் ராம் சிகரெட் பிடித்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதனை போலீசார் ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து படப்பிடிப்பில் சிகரெட் பிடிக்கும் காட்சியும் ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு படக்குழுவினர் தள்ளப்பட்டுள்ளனர்.
-தமிழ்