பாலிவுட்டில் டாப்ஸி கிடு கிடு வளர்ச்சி கடுப்பில் கங்கனா குடும்பம்!

Kangana Sister blame Tapsee directly and a cold war started in bollywood

by Mari S, Jul 15, 2019, 12:25 PM IST

தமிழில் வெளியான ஜெயம் ரவியின் தாம் தூம் படத்தில் நாயகியாக நடித்த கங்கனா ரனாவத் பின்னர் பாலிவுட் சினிமாவில், குயின் படத்திற்காக தேசிய விருது பெற்று முன்னணி நடிகையாக மாறினார்.

ஆனால், அவரது சர்ச்சை கருத்துக்களால் பாலிவுட்டில் அவருக்கான ஆதரவு பெரிதாக இல்லை.

இந்நிலையில், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான டாப்ஸி, தற்போது பாலிவுட்டில் அமிதாப் பச்சனுடன் பிங்க், பாட்லா என சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், டாப்ஸி, தனது அக்கா கங்கனா குறித்து மறைமுகமாக பேசியதாக குற்றம்சாட்டியுள்ள அவரது தங்கை ரங்கோலி, டாப்ஸியை நேரடியாக விமர்சித்துள்ளார்.

டாப்ஸி, ரியலாக நடிப்பதில்லை என்றும், தனது அக்கா கங்கனாவையே மிமிக்ரி செய்து காப்பி அடித்து பாலிவுட்டில் பிழைப்பை நடத்துகிறார் என ஓபனாக விமர்சித்துள்ளார்.
கங்கனாவின் இடத்தை டாப்ஸி பிடித்து விட்ட வயிற்றெரிச்சலே இதற்கு காரணம் என டாப்ஸி ரசிகர்கள் ரங்கோலி மற்றும் கங்கனாவை சமூக வலைதளங்களில் வசை பாடி வருகின்றனர்.

திடீரென நேர்கொண்ட பார்வை டிரைலர் அறிவிப்பு ஏன் தெரியுமா?

You'r reading பாலிவுட்டில் டாப்ஸி கிடு கிடு வளர்ச்சி கடுப்பில் கங்கனா குடும்பம்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை