அந்தாதுன் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் பிரசாந்த்!

by Mari S, Aug 24, 2019, 09:11 AM IST

முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்த நடிகர் பிரசாந்த் சமிபகாலத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். தற்போது மீண்டும் அந்தாதுன் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் இந்தியில் வெளியான படம் தான் அந்தாதுன். இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே என பலர் நடித்திருப்பார்கள். மேலும் இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா ஒரு பார்வையற்ற பியானோ வாசிப்பாளராக நடித்திருப்பார்.

இந்த படத்தின் ரீமேக் உரிமத்தை பிரசாந்தின் தந்தையும், இயக்குனருமான நடிகர் தியாகராஜன் பெற்றுள்ளார். ஏற்கனவே ஜானி கத்தார் படத்தை பிரசாந்தை வைத்து ஜானி என்ற பெயரில் தியாகராஜன் இயக்கி வெளியிட்டார். ஆனால், அந்த படமும் தோல்வி படமாக அமைந்தது.

மூன்று தேசிய விருதுகளை பெற்றுள்ள அந்தாதூன் படம் தனது சினிமா வாழ்விற்கு கம்பேக்காக அமையும் என்பதால், இந்த படத்திற்காக 20 கிலோ வரை எடையை குறைத்துள்ளார் நடிகர் பிரசாந்த்.


Leave a reply