விஜய் ஆண்டனியுடன் இணையும் இந்துஜா!

by Mari S, Aug 24, 2019, 09:19 AM IST

ஏ.செந்தில் இயக்கும் காக்கி படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாய்மை படத்தை இயக்கியவர் இயக்குனர் ஏ.செந்தில் தற்போது விஜய் ஆண்டனியை வைத்து காக்கி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருடன் இணைந்து ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க இந்துஜா தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்துஜா தற்போது பிகில் படத்தில் விஜயுடன் இணைந்து கால்பந்து வீராங்கனையாக நடித்துள்ளார்.

விஜய் ஆண்டனி, அக்னிச் சிறகுகள், தமிழரசன், மெட்ரொ பட இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணாவுடன் ஒரு படம் என பல படங்களில் பிசியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிகில் படத்தில் தனது போர்ஷனை முடித்த கதிர்!


More Cinema News