பிகில் படத்தில் தனது போர்ஷனை முடித்த கதிர்!

by Mari S, Aug 1, 2019, 13:08 PM IST

மதயானைக் கூட்டம், கிருமி, பரியேறும் பெருமாள், விக்ரம் வேதா என பல வெற்றி படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் கதிர், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பிகில் படத்தில் தன்னுடைய ஷூட் ஓவர் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் நடிக்கும் பிகில் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், இந்துஜா, விவேக், யோகிபாபு, ஜாக்கி ஷெராஃப் என முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கதிர் நடிக்கும் காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டுள்ளன. அதனை அவரே தனது ட்விட்டர் பதிவின் மூலம் அறிவித்துள்ளார். மேலும், விஜய் அண்ணாவின் அரவணைப்பு தனக்கு மகிழ்ச்சியை தந்தது என்றும் பதிவிட்டுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான சிங்கபெண்ணே பாடல் 9 மில்லியன் பார்வைகளை கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் படத்தில் இசை வெளியீட்டு விழாவும் நடைபெறும் என ரசிகர்கள் ஆவலோடு வெயிட்டிங்!

லீக்கானது பிகில் பட பாட்டு; அப்செட்டில் விஜய், ஏ.ஆர். ரஹ்மான்!


Leave a reply