நாளைக்கும் நயன்தாரா படம் ரிலீஸ் இல்லை?

நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் படங்கள் அவருக்கு நல்ல பெயரை கொடுத்து வந்த நிலையில், நயன்தாரா லீடு ரோலில் நடித்துள்ள கொலையுதிர் காலம் திரைப்படம் வருமா? வராதா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாகவே இந்த படத்திற்கு ரிலீஸ் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இறுதியில் கடந்த மாதம் ஜூலை 26ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு, நீதிமன்றத்துக்கு நன்றி கார்டுகள் எல்லாம் அடித்தார்கள். ஆனால், இறுதியில் பட ரிலீஸ் ஆகஸ்ட் 1ம் தேதியான இன்று ரிலீசாகும் என தள்ளிப் போடப்பட்டது.

ஆனால், படம் இன்றும் ரிலீசாகவில்லை. நாளை ஜோதிகா நடிப்பில் வெளியாகவுள்ள ஜாக்பாட் படத்திற்கு போட்டியாக ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகும் என மீண்டும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை எந்த தியேட்டரிலும் படத்திற்கான டிக்கெட் புக்கிங் துவங்கவில்லை. இதனால் சக்ரி டொலட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள நயன்தாராவின் கொலையுதிர் காலம் படம் எப்போது ரிலீசாகும் என்ற கேள்விக்குறி மீண்டும் எழுந்துள்ளது.

இந்த படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் தான் நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய சர்ச்சை அவதூறாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.

ராதாரவி விவகாரத்தில் நடிகர் சங்கத்தை கேள்வி கேட்ட நயன்தாரா...! ஓட்டுப் போடாதது ஏன்

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
jayam-ravis-new-film-bhoomi
ஜெயம் ரவி நடிக்கும் பூமி.. நிதி அகர்வால் ஜோடி..
celebs-are-impressed-with-thalapathy-vijays-bigil-trailer
பிகில் டிரைலருக்கு ஷாருக் சமந்தா பாராட்டு.. ஹாலிவுட் இயக்குனர் டிவிட்டர் கருத்து..
samantha-wrapped-shoot-for-96-movie-official-telugu-remake
திரிஷாவாக மாறிய சமந்தா.... விஜய்சேதுபதியாக மாறிய சர்வானந்த்..
police-stopped-vijays-bigil-trailer-at-chennai
விஜய் பட ட்ரைலருக்கு போலீஸ் திடீர் தடை.. ரசிகர்கள் திரண்டதால் சென்னையில் பரபரப்பு..
official-statement-from-director-bharathiraja
திரையரங்கு உரிமையாளர்கள் மீது பாரதிராஜா தாக்கு.. சிறுபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் மறுப்பதா?..
santhanam-gets-two-hot-young-heroines-for-his-next-movie
சந்தானத்துக்கு இரண்டு ஹீரோயின்கள் ஜோடி..
no-politics-in-vijays-bigil
பிகில் படத்தில் அரசியலா?.. தயாரிப்பாளர் பதில்..
warrant-against-ameesha-patel-in-cheque-bounce-case
விஜய் பட நடிகைக்கு பிடி வாரண்டு.. 3 கோடி செக் மோசடி வழக்கு..
jodhika-at-the-korean-film-festival
கொரியா பட விழாவில் ஜோதிகாவின் ராட்சசி...
sye-raa-narasimha-reddy-collection-hindi-version
சிரஞ்சீவி பட வசூல் 8 கோடியுடன் முடிவுக்கு வந்தது
Tag Clouds