ரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

by Mari S, Aug 24, 2019, 09:22 AM IST

ஐஸ்வர்யா ராஜேஷ் சமிபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ரஜினியுடன் நடிக்க ஆசை எனக் கூறியுள்ளார்.

வளர்ந்து வரும் நடிகைகளுள் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒருவராவார். பல தமிழ் படங்களில் நடித்த அவர் கனா படத்தின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டார். தற்போது அவர் பாண்டிராஜ் இயக்கியுள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்து வருகிறார். மேலும் விக்ரம் பரபுவுக்கு தங்கையாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமிபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஹீரோயின் கேரக்டர் தான் வேண்டும் என்பதில்லை, எந்த கேரக்டராக இருந்தாலும் அந்த கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் அதில் நடிப்பேன் என்றும் தான் ரஜினியின் பெரிய ரசிகை, அவருடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பது தனது ஆசை என்றும் கூறியுள்ளார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தின் எங்க அண்ணன் பாடல் வெளியீடு!

Get your business listed on our directory >>More Cinema News

அதிகம் படித்தவை