நம்ம வீட்டு பிள்ளை படத்தின் எங்க அண்ணன் பாடல் வெளியீடு!

by Mari S, Aug 24, 2019, 12:03 PM IST

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் நம்ம வீட்டு பிள்ளை இந்த படத்தில் இடம்பெற்றுள்ள எங்க அண்ணன் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அனு இமானுவல், சூரி, யோகி பாபு, நடராஜன் சுப்புரமணியன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். தற்போது அவர் இசையில் நம்ம வீட்டு பிள்ளை படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. எங்க அண்ணன் எங்க அண்ணன் என்ற பாடல் வரிகள் மூலம் அனைவரின் அண்ணன் தங்கை உறவுமுறையை வலுபடுத்துமாறு பாடலை அமைத்துள்ளனர். பாடலின் ஆங்காங்கே சிவாஜி தனது தங்கையை பற்றி கூறும் வசனங்கள் இடம் பெறுகிறது. இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.
இந்த பாடல் ரிலீசுக்கு பிறகு, படம் எவ்வாறு இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

 

பிரியங்கா சோப்ராவுக்கு செக் வைத்த பாகிஸ்தான்


More Cinema News

அதிகம் படித்தவை