பக்ரீத் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த சசிகுமார்!

by Mari S, Aug 24, 2019, 13:48 PM IST
Share Tweet Whatsapp

பக்ரீத் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார், இயக்குனரும் நடிகருமான சசிகுமார்.

ஜெகதீசன் சுபு இயக்கத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்று வருகிறது பக்ரீத் திரைப்படம். விக்ராந்த் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமத்துள்ளார். விடுமுறை நாளான இன்று இந்த படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் விக்ராந்த் தனது தனித்துவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சமிபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு2 படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால், அதனை இந்த படம் சரி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இந்த படத்திற்கான வாழ்த்தை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துக்களை விக்ராந்த், வசுந்தரா, ஜெகதீஷ் சுபு, இமான் மற்றும் குழுவிற்கு பகிர்ந்துள்ளார்.

பயில்வானாக மாறிய கிச்சா சுதிப்; ரணகளப்படுத்தும் டிரைலர்!


Leave a reply