விஜய் படம் கிடைக்கல.. பாலிவுட்டுக்கு பறந்த ராஷ்மிகா!

by Mari S, Sep 5, 2019, 22:02 PM IST
Share Tweet Whatsapp

கீத கோவிந்தம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீத கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் படங்களில் நடித்த ராஷ்மிகா மந்தனா, இன்கேம் இன்கேம் காவாலே பாடலில் மூலம், தென்னிந்தியா முழுவதும் ஃபேவரைட் ஹீரோயின் ஆனார்.

விஜய்யின் தீவிர ரசிகையான அவர், எப்படியாவது விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படையாகவே பேட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும் தெரிவித்து வந்தார்.

ஆனால், இதுவரை விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, தளபதியின் 64வது படத்தில் ஆவது நாயகியாக நடிக்க வேண்டும் என்று எண்ணினார். 

ஆனால், அந்த படத்தில் கியாரா அத்வானியை நாயகியாக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதால், மீண்டும் அப்செட்டான ராஷ்மிகா, தானும் ஒரு பாலிவுட் ஸ்டாராக மாற வேண்டும் என்ற முடிவில், பாலிவுட் படம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.

அந்த பாலிவுட் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ராஷ்மிகா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Leave a reply