தீவிர ராணுவ பயிற்சியில் தமன்னா !

by Mari S, Sep 7, 2019, 17:16 PM IST
Share Tweet Whatsapp

சுந்தர்.சி இயக்கும் ஆக்‌ஷன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துவரும் தமன்னா, அந்த படத்தில் ராணுவ கமாண்டோவாக நடிக்கிறார். இதனால் அந்த படத்தில் வரும் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க முறைப்படி தமன்னா ரியல் ராணுவ பயிற்சி எடுத்து வருவதாக இயக்குனர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

தற்போது விஷாலை வைத்து ஆக்‌ஷன் என்ற படத்தை இயக்கிவருகிறார், இயக்குனர் சுந்தர்.சி. நல்ல சண்டை காட்சிகள் கலந்த கமர்ஷியல் படமாக ஆக்‌ஷன் உருவாகி வருகிறது.

அஜித், விஜய், சூர்யா, விகரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த தமன்னா புதிய புதிய கேரக்டர் ரோல்களில் விரும்பி நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவருக்கு இந்த படம் ஒரு நல்ல வரவேற்பை தரும் என கூறப்படுகிறது. சமிப காலத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த நடிகை தமன்னாவிற்கு தற்போது படவாய்ப்புகள் நிறைய வரத் தொடங்கியுள்ளது.

பெட்டர்மாக்ஸ் என்னும் திரில் கதையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்து வரும் தமன்னா, ஆக்‌ஷன் படத்தில் ராணுவ வீரராக நடிக்கும் விஷாலுக்கு  இணையாக சண்டை காட்சிகளில் நடிக்க இருப்பதால் ராணுவ பயிற்சிகளை முறைப்படி கத்துக்கொண்டு நடித்து வருகிறாராம்.

ஏற்கனவே கத்திசண்டை படத்தில் விஷாலுடன் தமன்னா இணைந்து நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இந்த படத்திலாவது அவர்களது காம்பினேஷன் ஒர்க்கவுட் ஆகிறதா என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.


Leave a reply