லயன் கிங் டப்பிங்கை தொடர்ந்து அரவிந்த்சாமிக்கு அடித்த ஜாக்பாட்!

by Mari S, Sep 9, 2019, 08:26 AM IST

லயன் கிங் படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கான தமிழ் டப்பிங்கில் கலக்கிய அரவிந்த்சாமி, அடுத்ததாக, தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு குரல் கொடுக்க உள்ளார்.

பாகுபலிக்கு பிறகு பிரம்மாண்ட பொருட்செலவில் தெலுங்கு சினிமாவில் 240 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, விஜய்சேதுபதி, தமன்னா, அமிதாப்பச்சன், சுதிப் என பல மொழி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி வரும் சைரா நரசிம்ம ரெட்டி, விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது. இந்த படத்தில் இடம்பெறும் நாயகன் சிரஞ்சீவியின் தமிழ் டப்பிங்கிற்காக நடிகர் அரவிந்த்சாமி குரல் கொடுக்க தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

சிம்மக் குரலில் பேசும் அரவிந்த்சாமியின் குரல் சிரஞ்சீவியின் கர்ஜனைக்கு சரியாக பொருந்தும் என படக்குழு கருதியதே இதன் தமிழ் பதிப்புக்கு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a reply