மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் ஆகியுள்ள கனிகா !

நீண்ட கால இடைவெளிக்குப் பின், தற்போது விஜய்சேதுபதியுடன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார், நடிகை கனிகா.

2002ம் ஆண்டில் பிரசன்னா ஹீரோவாக நடித்து வெளிவந்த படம் பைவ் ஸ்டார். இந்த படத்தில் தான் முதன்முதலில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார் நடிகை கனிகா. அந்த படத்திற்கு பிறகு மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் வெளியான பல படங்களில் நடித்தார். தமிழில் சேரனுடன் ஆட்டோகிராப், அஜித்துடன் வரலாறு போன்ற பெரிய படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு சினிமா உலகத்தில் வளம் வந்துக்கொண்டிருந்த இவர் சில வருடங்களாய் தமிழ் சினிமாவில் காணாமல் போனார். தமிழில் சரியான படவாய்ப்புகள் கிடைக்காததால். மலையாள படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.

இந்நிலையில், சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய்சேதுபதி நடிக்கிறார். அந்த படத்தில் கனிகா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.