பாலிவுட் பட டீசர் போல மிரட்டும் விஷாலின் ஆக்ஷன் டீசர்!

சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் படத்தின் டீசர் சற்றுமுன், யூடியூப் பிரீமியரில் வெளியிடப்பட்டுள்ளது.

இரும்புத்திரை, அயோக்யா என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக கொடுத்து வரும் நடிகர் விஷால், அடுத்த ஆக்‌ஷனுக்கு ரெடியாகி விட்டார். சுந்தர். சி இயக்கத்தில், விஷால், தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் படத்தின் டீசர் சற்று முன் மாலை 5 மணிக்கு வெளியானது.

நடிகர் விஷால் இந்த டீசரை வெளியிட்டுள்ளார். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இணையான அசத்தல் ஆக்‌ஷன் காட்சிகளுடன் இந்த ஆக்‌ஷன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு பெற்று வருகிறது.

ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை டீசருக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. விஷால், சுந்தர். சி கூட்டணியில் உருவான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி மீண்டும் விஷால் – சுந்தர்.சி  கூட்டணியில் இணைந்துள்ளார்.

கத்திச்சண்டை படத்திற்கு பிறகு விஷாலுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் தமன்னா. இவர்களை தவிர இந்த படத்தில் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, யோகி பாபு, அகான்ஷா புரி, கபீர் துஹான் சிங், ராம்கி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

விரைவில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
is-nayanthara-will-attend-syera-audio-launch
பிகிலுக்கு பை சொன்ன நயன்தாரா.. சைராவுக்காவது ஹாய் சொல்வாரா?
sangaththamizhan-trailer-released
சங்கத்தமிழனில் விஜய்சேதுபதிக்கு டபுள் ஆக்ஷனா?
bigil-juke-box-released
இதுக்கு எதுக்குடா இவ்ளோ செலவு பண்ணி ஆடியோ லான்ச் பண்ணீங்க?
world-famous-lover-first-look-released
என்னடா வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வரை இப்படி ஆக்கி வச்சிருக்கீங்க?
nvp-will-release-before-asuran
அசுரனை முந்தும் நம்ம வீட்டு பிள்ளை!
kaappaan-movie-review
நாட்டுக்கு கமாண்டோ முக்கியமா விவசாயி முக்கியமா? காப்பான் விமர்சனம்!
vijay-fire-speech-on-bigil-audio-launch
என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள்.. விஜய்யின் முழு பேச்சு இதோ!
atlee-say-no-hero-will-come-up-his-mind-other-than-vijay
வேற ஹீரோவ வச்சி படம் பண்ண சொன்னாரு விஜய் அண்ணா!
vijay-came-in-black-shirt-for-the-audio-launch-of-bigil
கருப்பு சட்டையில் மாஸ் காட்டும் விஜய்!
perarasu-waiting-for-vijay-reply
விஜய்க்காக வெயிட் பண்றேன்.. பேரரசு ஓபன் டாக்!
Tag Clouds