பிகில் இசைவெளியீட்டு விழாவில் புதிய சிக்கல் ரசிகர்கள் ஏமாற்றம்!

by Mari S, Sep 14, 2019, 07:26 AM IST
Share Tweet Whatsapp

விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழா லைவ்வாக ஒளிபரப்ப போவதில்லை என்ற அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு பயங்கர ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

விஜய்யின் மெர்சல், சர்கார் படங்களின் இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெறும் போதே உலகமெங்கும் உள்ள விஜய் ரசிகர்கள் அதனை கண்டுகளிக்க லைவ் டெலிகாஸ்ட் செய்தது சன் டிவி.

ஆனால், இம்முறை வரும் செப்டம்பர் 19ம் தேதி பிகில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் போது லைவ் டெலிகாஸ்ட் செய்யப்போவதில்லை என்றும், அதற்கு பதிலாக சன் டிவியில் வரும் செப்டம்பர் 22ம் தேதி மாலை 6.30 மணிக்கு பிகில் இசைவெளியீட்டு விழா எடிட் செய்து ஒளிபரப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.

ரஜினிக்கு பிறகு சினிமா விழாக்களில் விஜய் பேசும் அரசியல் வருகை வசனங்களுக்காகவே அந்த விழாக்கள் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

இந்நிலையில், இசை வெளியீட்டு விழா, லைவ் இல்லை என்றாலும், விஜய் பேசிய விஷயங்கள் யூடியூப்களிலும், செய்தி சேனல்களிலும் தலைப்பு செய்திகளாக அன்றே வெளியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், பயங்கர அப்செட்டில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக அர்ச்சனா கல்பாத்தி ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். சில தொழில்நுட்ப காரணங்களுக்காக பிகில் ஆடியோ லான்ச்சை லைவ் செய்ய முடியவில்லை என்றும், வரும் ஞாயிற்றுக் கிழமை சன் டிவியில் பிகில் ஆடியோ வெளியீட்டு விழா ஒளிபரப்பாகி, டிஆர்பியில் புதிய உச்சத்தை தொடும் என்றும் கூறியுள்ளார்.

அப்போ இது டெக்னிக் கோளாறு தானா அல்லது வர்த்தக நோக்கமா? என்ற விமர்சனமும் தற்போது எழுந்துள்ளது. சினிமா என்றாலே எல்லாத்துலயும் காசு பார்க்கிறது தானே!


Leave a reply