எனக்கு இப்ப பாலிவுட் செல்ல நேரம் வந்துடுச்சிடி!

YogiBabu going to work with AmeerKhan

by Mari S, Sep 14, 2019, 11:16 AM IST

அமீர்கான் படத்தில் யோகிபாபு நடிக்க உள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

பன்னி மூஞ்சி வாயா என யாமிருக்க பயமே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் யோகி பாபு, தனது உடல் மொழியை கிண்டல் செய்தவர்கள் மத்தியில், அதே உடல் மொழியை கொண்டு நகைச்சுவை நடிகராகி, தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நட்சத்திரமாகவும், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

நயன்தாராவுடன் டூயட், கீர்த்தி சுரேஷ் தேடும் மாப்பிள்ளை என யோகி பாபுவின் லெவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்நிலையில், கோலிவுட்டை தாண்டி பாலிவுட் படத்தில் நடிக்க யோகி பாபு கமீட் ஆகியுள்ளார். ஆஸ்கர் விருது வென்ற ஃபாரஸ்ட் கம்ப் படத்தில் தான் இந்த அல்ட்ரா கூட்டணி இணைந்துள்ளது.

ஏற்கனவே விஜய்சேதுபதி இந்த படத்தில் அமீர்கானுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன் பின்னர், தற்போது யோகிபாபுவும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும், அதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

You'r reading எனக்கு இப்ப பாலிவுட் செல்ல நேரம் வந்துடுச்சிடி! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை