இன்சமாம் உல் அக்கின் உலகசாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!

by Mari S, Sep 14, 2019, 11:31 AM IST
Share Tweet Whatsapp

இங்கிலாந்துக்கு எதிராக 9 அரைசதங்களை ஒரே டெஸ்ட் தொடரில் அடித்து சாதனை படைத்த இன்சமாம் உல் அக்கின் உலக சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னரின் படுமோசமான ஆட்டத்தை விமர்சித்து வந்த அதே வேளையில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தொடர்ந்து 10 போட்டிகளில் அரைசதம் அடித்து புதிய உலக சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

பாகிஸ்தான் வீரர் இன்சமாம் உல் அக் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடிய 9 போட்டிகளில் தொடர்ந்து அரைசதம் அடித்து உலக சாதனையை படைத்து இருந்தார். அவரது சாதனையை அதற்கு பிறகு வேறு யாரும் முறியடிக்க முடியாமல் திணறி வந்தனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித், கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் நேற்று சதத்தை தவறவிட்டு அவுட் ஆனார். ஆனால், அவர் அடித்திருந்த அரை சதத்தின் மூலம், இன்சமாம் உல் அக்கின் நீண்ட நாள் சாதனை முறியடிக்கப்பட்டு, முதலிடத்தை ஸ்டீவ் ஸ்மித் பிடித்துள்ளார்.

4வது டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்த போதே இன்சமாம் உல் அக்கின் உலக சாதனை சமன் செய்யப்பட்ட நிலையில், 5வது டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து 10 அரைசதங்கள் கடந்து ஒரு அணிக்கு எதிராக அதிக முறை அரைசதம் கடந்த வீரர் என்ற பட்டத்தை ஸ்டீவ் ஸ்மித் தனதாக்கியுள்ளார்.

இதுவரை 2-1 என முன்னிலை வகித்து வரும் ஆஸ்திரேலிய அணி இந்த 5வது டெஸ்ட் போட்டியில் வெல்லும் பட்சத்தில் ஆஷஸ் கோப்பையை வென்று சாம்பியன் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a reply