விஜய்க்காக வெயிட் பண்றேன்.. பேரரசு ஓபன் டாக்!

by Mari S, Sep 19, 2019, 16:31 PM IST

தளபதி 65 படத்தை இயக்குநர் பேரரசு இயக்கவுள்ளார் என்ற செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், அது தொடர்பாக பேரரசு மனம் திறந்துள்ளார்.

திருப்பாச்சி, சிவகாசி என அடுத்தடுத்து விஜய்யை வைத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநர் பேரரசு, அஜித்தை வைத்து திருப்பதி என்ற படத்தை இயக்கினார். விஜய்யை வைத்து பேரரசுக்கு கிடைத்த வெற்றி அதற்கடுத்து அவர் இயக்கிய எந்த படத்திற்கும் கிடைக்காமல் போனது.

ஊர் பெயர்களையே படத்தின் தலைப்பாக வைத்து படமாக எடுத்து வந்து தனக்கான தனி முத்திரையை இயக்குநர் பேரரசு கைப்பற்றியுள்ளார்.

ஆனால், திருப்பதி, பழனி, திருத்தணி, தர்மபுரி என அடுத்தடுத்து அவர் இயக்கிய படங்கள் படு தோல்வியை சந்திக்க சினிமாவில் இருந்தே ஒதுக்கப்பட்டார்.

இந்நிலையில், தற்போது மீண்டும், விஜய் படத்தை பேரரசு இயக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

இதுகுறித்து செய்தியாளர்கள் பேரரசுவிடம் கேட்டதற்கு, அந்த செய்தி இதுவரை கன்ஃபார்ம் ஆகவில்லை. ஆனால், நானும் என் கதையும் விஜய்க்காக காத்திருக்கிறோம். அந்த செய்தி உண்மை ஆக வேண்டும் என்று தான் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு இருக்கிறேன் என தனக்கே உரித்தான கலகலப்பான ஸ்டைலில் பேரரசு கூறியுள்ளார். இப்படி ஓபன் டாக்காக பேரரசு பேசியுள்ளதை விஜய் செவி மடுத்து பேரரசுக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


More Cinema News